தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதையடுத்து சமீபத்தில் 2வது மாநில மாநாடு மதுரையில் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது இக்கட்சியில் புதிய மாற்றம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதாவது 25000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என புதிய பொறுப்பை உருவாக்க மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தலைமை உத்தரவிட்டுள்ளது.

தற்போது ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு ஒன்றிய செயலாளர் உள்ள நிலையில், இனி 6 முதல் 30 ஒன்றிய செயலாளர் வரை நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் நிர்வாகிகள் வாக்காளர்களை எளிதில் அணுக முடியும், பூத் கமிட்டியை வலுவாக்க முடியும் என்று விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.