ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் சாலை விபத்து நடந்துள்ளது. தும்மலவலசை என்ற கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் ஆட்டோவின் மூலம் வீடு திரும்பி உள்ளனர். அப்போது எதிரே வந்தே லாரி மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.