தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் பெரிய முயற்சியால் உருவாக்கப்பட்டதுதான் உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழரின் ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் விதமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இந்த மாநாடு நடத்த உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது. இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் 11 ஆவது உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற உள்ளது.

உலக தமிழ் மாநாடு தேதி, இடம் குறித்த அறிவிப்பை உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற செயலாளர் நந்தன் மாசிலாமணி அறிவித்துள்ளார். அதில், ஜூலை 21-23 வரை மலேசியாவில் 11-வது உலக தமிழ் மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சார்ஜாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நிர்வாக காரணங்களால் மலேசியாவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மலேயா பல்கலை வளாகத்தில் மாநாடு நடைபெற இருக்கிறது.