
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக சிந்துநதி நீர் தடை போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. பாபர் அசாம், ஷஹீன் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், அப்துல்லா ஷஃபீக் உள்ளிட்ட வீரர்கள் பலரது இன்ஸ்டா கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது.