
ஆன்லைன் விளையாட்டுக்களுக்கான நேர கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது. candy crush விளையாட்டுடன் ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு என தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் வாதிட்டார். இதனை அடுத்து நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.