
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் தகரக் கொட்டகை வீடுகள் உள்ளது. இந்த கொட்டகை வீடுகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த கொட்டகை வீடுகளில் இருந்த நான்கு சிலிண்டர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெடித்துள்ளன.
இதில் 42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டம் ஆக்கியது. மேலும் அப்பகுதி முழுக்க புகைமூட்டமாக உள்ளது. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை.