சென்னை உயர்நீதிமன்றம் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழ்நாடு அரசுக்கு  அனுமதி கொடுத்துள்ளது. அதாவது பட்டதாரி ஆசிரியர்களை நேரடி பணி நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து ஆசிரியர் அல்லாதோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் தங்களுக்கு சேர வேண்டிய இரண்டு சதவீத இட ஒதுக்கீடு தராமல் பணி நியமன ஆணை வழங்கக்கூடாது என வலியுறுத்தி இருந்தனர். மேலும் இந்த மனு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2500 ஆசிரியர்களுக்கு பணிநீயமான ஆணை வழங்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கொடுத்து உத்தரவிட்டுள்ளது.