சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்னும் மழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் விடுமுறை தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.