11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வருகின்ற மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு முடிவு வெளியான பிறகு துணை தேர்வு தேதிகள் அறிவிப்பு வெளியாகும்.