ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27 ஆம் தேதி முடிவடைந்து இன்று காலை 8 மணி முதலே வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் காங்., வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் 17,417 வாக்குகள், அதிமுக வேட்பாளர் தென்னரசு 5,598 வாக்குகள் பெற்றுள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 585, தேமுதிக 17 வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ளனர்.