அமைச்சர் பொன்முடியின் வீடு,அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது; ரூ.48 கோடி வருவாய் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட பொன்முடியிடம் விடியவிடிய தூங்கவிடாமல் விசாரணை நடைபெற்றுள்ளது. பின் அதிகாலை 4 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு, இன்று மாலை 4 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.