தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பல இடங்களில் முத்திரை பதித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து, குறுகிய காலத்திலேயே மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள விஜய்யின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் ஜெகன் மோகன் ரெட்டி பாராட்டியுள்ளார்.
தமிழக அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி விஜய் எடுத்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சிக்கும், தவெக வேட்பாளர்களின் வெற்றிக்கும் அவர் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே இவர்களது சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட நிலையில், தற்போது ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த வாழ்த்து, இரு மாநில இளைய தலைமுறை அரசியல் தலைவர்களுக்கு இடையேயான ஒரு ஆரோக்கியமான உறவின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.
