தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கத் தேவையான மெஜாரிட்டியைத் திரட்டுவதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவருக்கு மற்றுமொரு முக்கிய ஆதரவு கிடைத்துள்ளது.
ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தனது ஆதரவு கடிதத்தை விஜய்க்கு வழங்கியுள்ள நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் (CPM) தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்க தவெக-விற்குத் தங்களது கட்சி ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் அணிவகுத்து ஆதரவு அளித்து வருவதால், ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற இலக்கை விஜய் மிக நெருங்கியுள்ளார்.
இன்று மாலை ஆளுநரைச் சந்திக்க உள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த ஆதரவு விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் பலமாக மாறியுள்ளது.
