விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விக்ரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14 நேற்று தொடங்கியது. இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் வருகின்ற ஜூலை 10 இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பாக சி. அன்புமணி போட்டியிடுவார் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். NDA கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் போட்டியிடுவார் என அண்ணாமலை நேற்று கூறிய நிலையில் இன்று வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுக சார்பாக அன்னியூர் சிவாவும், நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.