லடாக்கில் ராணுவாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். லடாக்கின் கியாரி நகர் அருகே சென்ற போது இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லடாக்  கியாரி நகருக்கு 7 கிமீ தொலைவில் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். ராணுவ வீரர்கள் கரு காரிஸனில் இருந்து லே அருகே உள்ள கியாரிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் பல வீரர்கள் காயமடைந்துள்ளனர் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.