மத்திய அரசானது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது பாரம்பரிய கைவினைத் தொழிலாளர்களுடைய நலனுக்காக 13,000 கோடி ரூபாய் மதிப்பில் பி.எம். விஷ்வகர்மா என்ற  திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுதந்திரதின நிகழ்ச்சியில் பிரதமர்  நரேந்திர மோடி இந்த திட்டத்தை அறிவித்தார்.

நாட்டில் 30 லட்சம் கைவினைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என கூறப்படுகிறது. திட்டத்தின் மூலம் 2 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். மண்பாண்ட தொழில், தையல், படகு கட்டுமானம் உள்ளிட்ட பாரம்பரிய தொழில் வளர்ச்சிக்கு இந்த திட்டம் கை கொடுக்கும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.