இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அரசு தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது பாஸ்போர்ட் தொடர்பான போலி இணையதளங்களிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அதன்படி* .org, * .in, * .com போன்ற டொமைன் பெயரில் www.indiapassport.org, www.online-passportindia.com, www.passportindiaportal.in, www.passport-india போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன. www.passport-seva.in, www.applypassport.org மற்றும் சிறிய எழுத்து மாற்றங்களுடன் பாஸ்போர்ட் எடுத்து தருவதாக வலைத்தளங்கள் இயங்குகின்றன.  இந்த இணையதளங்கள் பொது தகவல்களை சேகரித்து வருவதால் www.passportindia.gov.in என்ற இணையதளத்தை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.