காங்கிரஸ் தரப்பில் அமேதி, ரேபரேலி தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற நீண்ட எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ரேபரேலியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் ஷர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியைத் தழுவியதால், இந்த முறை தொகுதியை மாற்றியதாக தெரிகிறது. வயநாட்டைத் தொடர்ந்து, ரேபரேலி தொகுதியிலும் ராகுல் போட்டியிடுகிறார்.