சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இதற்காக 1543 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட இருக்கிறது. மேலும் பேருந்து நிலையங்களை நவீனமயமாக்க ஒப்பந்த புள்ளியை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.