
GPS மூலம் சுங்கக் கட்டணம் குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மே 1 முதல் நாடு தழுவிய செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை குறித்து வரும் தகவல் உண்மை அல்ல.
செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.