இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (100), கடந்த 22ஆம் தேதி தனது வீட்டில் தவறி விழுந்து காயம் அடைந்தார். இதையடுத்து அவர் நந்தனத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “நல்லகண்ணுவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. வயது மூப்பு தொடர்பான சிக்கல்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.