கரூரில் தேமுதிகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட அரவை முத்து, இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திருச்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவருடன் சுமார் 200 பேர் அதிமுகவில் சேர்ந்து கொண்டனர்.

கரூர் மாநகர் மாவட்ட செயலாளராக இருந்து வந்த முத்து, விஜயகாந்தின் நம்பிக்கையைப் பெற்றவர். இதன் காரணமாகவே 2016 இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் அவர் போட்டியிட்டார். தற்போதைய சூழலில் தேமுதிக–அதிமுக கூட்டணி குறித்து பேச்சு நடைபெறும் நிலையில், அரவை முத்து அதிமுகவுக்கு தாவியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.