ஜிஎஸ்டி வரி விகிதத்தில் பெரிய மாற்றத்தை ஒன்றிய அரசு தீபாவளிக்கு முன் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்–அரிசி வணிகர்கள் சங்கங்கள் சார்பில் மாநில அரசுக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தற்போது 25 கிலோ எடையுள்ள அரிசி மற்றும் பருப்பு பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை குறைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தும்படி மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டால், விரைவில் அரிசி மற்றும் பருப்பு விலைகள் குறைய வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.