தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் போது நடிகர் விஜய் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என விமர்சித்தார். அதாவது தமிழக பெண்கள் தன்னை அப்பா என அழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறிவரும் நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்களின் கதறல்கள் உங்களுக்கு கேட்கவில்லையா எனவும் நடிகர் விஜய் மாநாட்டில் விமர்சித்ததோடு அங்கிள் என அவரை அழைத்தார்.
இது திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் திமுக எம்எல்ஏக்கள் சந்திரகுமார் மற்றும் கே.பி சங்கர் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என விஜய் அழைத்ததற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து தற்போது அவரை மோசமாக விமர்சித்துள்ளனர். இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ சந்திரகுமார் கூறியதாவது
ஈரோடு கிழக்கு MLA சந்திரகுமார், “சூரியனை பார்த்து நாய் குரைக்கும்; அதற்காக சூரியன் நாய் மீது கோபப்படுவதில்லை” என்று சர்ச்சை உண்டாக்கும் வகையில் பேசியுள்ளார். அதேபோல், திமுக MLA கே.பி. சங்கர், “அப்பா, அம்மா, மனைவியை பார்த்துக்கொள்ள முடியாதவர், மக்களை எப்படி பார்த்துக்கொள்வார்?” மேலும் நடிகைகளுடன் ஒப்பிட்டு மோசமாக விஜய் குடும்பத்தை குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக தலைவர் விஜயை அநாகரிகமாக விமர்சித்த DMK சட்டமன்ற உறுப்பினர்கள்..!#TVKvijay #Tvkmaanadu #DMK #MLA #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/7acLjJB0PG
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) August 24, 2025
“>
