
முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான சரத் யாதவ் காலமானார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான சரத் யாதவ் (75) வியாழக்கிழமை காலமானார். இதை அவரது மகள் சுபாஷினி யாதவ் ஃபேஸ்புக்கில் உறுதிப்படுத்தியுள்ளார். என் தந்தை இப்போது இல்லை என முகநூலில் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவிற்கு 7 முறையும், 3 முறை ராஜ்யசபாவிற்கும் ஜே.டி.யுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனதா தளம் (யுனைடெட்) 2003 இல் உருவானது முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதன் முதல் தேசியத் தலைவராக இருந்தார். கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர் ராஜ்யசபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் மற்றும் கட்சித் தலைமைப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டார்.
Former Union Minister Sharad Yadav passes away, confirms his daughter through a Facebook post. pic.twitter.com/p56lUeqz7B
— ANI (@ANI) January 12, 2023