டெல்லியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் உட்பட மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்தனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் 15 பேர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். ஏற்கனவே நேற்று தமிழகம் முழுவதும் சில இடங்களில் பாஜகவில் இருக்கக்கூடியவர்கள் அதிமுகவிலும், திமுகவிலும் இணைந்தனர். இந்த நிலையில் தற்போது டெல்லி சென்று இருக்கக்கூடிய பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அவர்கள், ஜே பி நட்டா முன்னிலையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாஜகவில் இணையக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதிமுகவில் இருந்து 16 பேரும், இந்திய தேசிய காங்கிரசிலிருந்து ஒருவரும் என 15 பேர் பாஜகவின் தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் இணைந்துள்ளனர்.

குறிப்பாக கரூர் சட்டமன்ற தொகுதியில் இருந்த முன்னாள் எம்எல்ஏவான வடிவேல், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ கந்தசாமி, கோமதி ஸ்ரீனிவாசன் முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார் அவரும் பாஜகவில் இணைந்துள்ளார். சிங்காநல்லூர் சின்னசாமி, துரை துரைசாமி கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் அவரும் பாஜகவில்  இணைந்துள்ளார். கன்னியாகுமரி எஸ். முத்துகிருஷ்ணன், புவனகிரியில் உள்ள பி.எஸ் அருள், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர் என 15 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

அதாவது, கு.வடிவேல், பி.எஸ் கந்தசாமி, கோமதி சீனிவாசன், ஆர் சின்னசாமி, ஆர் துரைசாமி, எம்.வி. ரத்தினம், எஸ். எம் வாசன், எஸ். முத்துகிருஷ்ணன், பி.எஸ்.அருள், என்.ஆர் ராஜேந்திரன், ஆர். தங்கராசு, குருநாதன், வி.ஆர் ஜெயராமன், பாலசுப்பிரமணியன், சந்திரசேகர் என 15 பேர் பாஜகவில் இணைந்தனர்

குறிப்பாக பாஜக தலைமை அலுவலகம் டெல்லியில் இருக்கக்கூடிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நாட்டா முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்று கொண்டுள்ளது. தமிழக பாஜக தலைவே அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டார் பங்கேற்றுள்ளனர். 16 ஆவது நபராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இணைந்துள்ளார்.