சென்னையில் ஆய்வு கூட்டத்தை முடித்த பின்னர் நாளை மாலை நெல்லை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

டெல்லியில் இருந்து நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். டெல்லியில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்வதாக இருந்த நிலையில், தற்போது அவருடைய திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு அவர் நாளை காலை சென்னை வந்து தலைமை செயலகத்தில் மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விட்டு நாளை மாலை விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக  நெல்லை செல்ல உள்ளார்.. ஏற்கனவே 10 அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில் முதலமைச்சர் சென்னை வந்து சில விவரங்களை சேகரித்துக் கொண்டு அவர் செல்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

சென்னை வந்துவிட்டு தான் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு செல்கிறார். ஏன் என்று சொன்னால் பல்வேறு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் மட்டும் 12 ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. எனவே தலைமை செயலகத்தில் அதிகாரிகளிடம் என்ன செய்யலாம் என்று முன்கூட்டியே ஆலோசனை நடத்திவிட்டு முதலமைச்சர் மதுரை சென்று அங்கிருந்து நெல்லைக்கு சாலை மார்க்கமாக சென்று நாளை மறுநாள் முழுவதும் வியாழக்கிழமை 21ஆம் தேதி ஒரு நாள் முழுவதும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இருப்பார் என்று தலைமைச் செயலாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.