தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று பிரமாண்டமாக நடைபெறும் நிலையில் அந்த கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு அனைத்து வேட்பாளர்களையும் நேரடியாக அறிமுகம் செய்கிறார்.
அதன்படி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதன் பிறகு அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கீழ்கண்ட தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்.
தியாகராயர் நகர் – புஸ்ஸி ஆனந்த்
மயிலாப்பூர் – வெங்கட்ராமன்
வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜுனா
கோபி – செங்கோட்டையன்
திருப்பரங்குன்றம் – நிர்மல் குமார்
திருச்செங்கோடு – அருண்ராஜ்
குமாரபாளையம் – விஜயலட்சுமி
சைதாப்பேட்டை – அருள்பிரகாசம்
எழும்பூர் – ராஜ் மோகன்
லால்குடி – கு.ப.கிருஷ்ணன்
திருப்பூர் வடக்கு – சத்தியபாமா
ஆயிரம் விளக்கு – ஜே.சி.டி.பிரபாகர்
கொளத்தூர் – வி.எஸ்.பாபு
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வி எஸ் பாபு போட்டியிடும் நிலையில் அதிமுக சார்பில் சந்தானகிருஷ்ணன் போட்டுயிடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
