தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது நிர்வாகச் சீர்திருத்தங்களின் அடுத்த கட்டமாக மிக முக்கியமான நியமனங்களை மேற்கொண்டுள்ளார்.

முதலமைச்சரின் தனிச் செயலாளர்களாக (Personal Secretaries) மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான செந்தில்குமார் மற்றும் லட்சுமி பிரியா ஆகியோரை நியமித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோட்டையில் தனது முதல் நாளைத் தொடங்கியுள்ள முதலமைச்சர் விஜய், அரசு நிர்வாகத்தை மிகத் திறமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கொண்டு செல்லும் நோக்கில், அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைத் தனது ‘கோர் டீமில்’ இணைத்துள்ளார்.

இந்த நியமனங்கள் மூலம் அரசு இயந்திரம் அசுர வேகத்தில் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கோட்டை வட்டாரம் இப்போதே பரபரப்படையத் தொடங்கியுள்ளது.