தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், தனது தவெக தொண்டர்கள் அதிகார போதையில் ‘ஆட்டம்’ போடுவதை அனுமதிக்க மாட்டேன் எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் இந்த அதிரடி முடிவை ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வரும் நிலையில், நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்த சகாயம் ஐஏஎஸ் அவர்களும் இது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். “தவறுகளைத் தடுப்பேன், ஆட்டம் போட அனுமதிக்க மாட்டேன்” என்று முதல்வர் விஜய் கூறியிருப்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த சகாயத்திடம், செய்தியாளர்கள் ஒரு நருக்கென்ற கேள்வியை முன்வைத்தனர்.

“வரும் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் நீங்கள் போட்டியா?” எனக் கேட்டதற்கு, தனது வழக்கமான புன்னகையுடன் பதிலளித்த சகாயம், “நான் இந்தச் சமூகத்தால் உருவாக்கப்பட்டவன், என்னுடைய சமூகப் பணி என்றும் தொடரும்” என்று கூறி மர்மம் நீடிக்கச் செய்தார்.

தேர்தல் போட்டி குறித்து நேரடியாகப் பதில் கூறாமல், “நீங்கள் கற்பனையாகக் கேட்கிறீர்கள், இதைப் பற்றி அவர்களிடமே கேளுங்கள்” என்று கூறி விடைபெற்றது, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“>