
சென்னையின் நேற்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 71960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9812 ரூபாய்க்கும், ஒரு சவரன் 78496 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 111000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.