சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 71,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதன் பிறகு ஒரு கிராம் 8920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 9730 ரூபாய்க்கும், ஒரு சவரன் 77840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 111 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 111000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.