
மக்கள் நீதி மய்யம் கட்சியினை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போவதாக கமல்ஹாசன் அறிவித்ததாகவும், அவர்களுடைய இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டதாகவும் தகவல் வெளியானது. 30ஆம் தேதி இந்த இணைப்பு டெல்லியில் ராகுல் முன்னிலையில் நடைபெறும் என்றும், மக்கள் நீதி மய்யம் தன்னை தானே கொன்றுவிட்டது என்றும், இனி நாம் அனைவரும் காங்கிரஸ்தான்என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்றும், ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம் எனடுவிட்டர் பக்கத்தில் மநீம பதிவிட்டுள்ளது. நேற்று இடைத்தேர்தலில் கமல் காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைதளம் விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்ட ஈனர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்.
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 27, 2023