
நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் மும்பை பங்குச்சந்தை நிலவரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதாவது மத்திய பட்ஜெட்டில் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்து அறிவிப்புகள் எதுவும் இடம்பெறாத நிலையில் தற்போது பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணாண சென்செக்ஸ் 1200 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 79,322 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.