மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்ய பாஜகவுடன் இணைந்து செயல்பட தயார் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இணைந்தது சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி.