மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்றது. இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அங்கு வெற்றி பெற 145 இடங்கள் தேவைப்படும் நிலையில் பெரும்பான்மைக்கு தேவையானதை விட 195 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

அதன்பிறகு காங்கிரஸ் 88 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் மற்ற கட்சிகள் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன்பிறகு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் 49 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 30 இடங்களிலும் மற்ற கட்சிகள் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.