சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3200 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை 2400 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் 1,08,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14727 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,816 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.