
பெங்களூருவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதஅமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதான பயங்கரவாதிகள் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது