வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக இன்று வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது புயல் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தாமதமாவதால் மணிக்கு 3 கிலோமீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து தமிழகத்தை நோக்கி வருகிறது.

இது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது புயல் உருவாக தாமதம் ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் புயல் தொடர்பான அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.