பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை. இவர் சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்றுள்ளார். இவருடைய 3 மாத அரசியல் படிப்பு நிறைவடையும் நிலையில் டிசம்பர் 1ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார். இவர் சென்னை திரும்பியதும் பல்வேறு அரசியல் திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. முன்னதாக எம் மண் எம் மக்கள் நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் மேற்கொண்ட நிலையில் லண்டன் சென்று விட்டதால் அவர் சென்னை திரும்பியதும் இரண்டாம் கட்ட நடை பயணத்திற்கு தயாராகிறாராம்.
அவர் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அதனை முன்னிட்டு இரண்டாம் கட்ட நடை பயணத்தை தொடங்க இருக்கிறார். மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சிறப்பாக செயல்பட்ட தொகுதிகளை குறி வைத்து நடைபயணம் செல்ல அண்ணாமலை திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜகவில் உள்கட்சி தேர்தலும் நடைபெற இருக்கிறது. மேலும் அண்ணாமலை வந்த பிறகு தமிழக அரசியல் களம் அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளால் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
