வங்கக்கடலில் நிலை கொண்டு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக புயலாக வலுப்பெற உள்ளது. இது சென்னைக்கு அருகே நிலவும் நிலையில் சென்னை உட்பட அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று புயல் உருவாக உள்ளதால் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும் இதன் காரணமாக நாளை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறை என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.