புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வந்த நிலையில், தற்போது காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் இன்று  கையெழுத்தானது. கூட்டணி உடன்பாட்டின்படி, புதுச்சேரியில் உள்ள மொத்தம் 30 தொகுதிகளில் காங்கிரஸ்: 16 தொகுதிகள், திமுக: 12 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (: 1 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI): 1 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தொகுதிப் பங்கீடு குறித்து பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை இன்று சுமுகமாக நிறைவடைந்தது. இந்த உடன்பாட்டின் மூலம் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வலுவான நிலையில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில், எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்தக் கட்சிகள் போட்டியிடும் என்பது குறித்த விரிவான பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பிரசாரப் பணிகளில் கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.