அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), தான் நடத்தி வந்த ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வின் பெயரை தற்போது அதிரடியாக மாற்றியுள்ளார். இந்தக் குழுவை அவர் ‘அதிமுக தொண்டர்கள் உரிமைக் மீட்புக் கழகம்’ (கட்சி) என்று அறிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை நாட்களாக குழு என்று குறிப்பிட்டு வந்த ஓபிஎஸ், தற்போது அதை ஒரு ‘கழகமாக’ (அரசியல் கட்சியாக) மாற்றியுள்ளார்.

இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, மாவட்டச் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை டிசம்பர் 23 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடத்த உள்ளதாகவும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். ஓபிஎஸ்ஸின் இந்தக் ‘கழகம்’ குறித்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.
