தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்மூட்டி. இவர் மலையாள சூப்பர் ஸ்டாராக இருக்கும் நிலையில் தற்போது வரை இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் அசத்தலாக நடித்து வருகிறார். இவருக்கு 74 வயதாகும் நிலையில் தற்போது வரை ஹீரோவாக படங்களில் கலக்கி வருகிறார்.
இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில் இவரது நடிப்பு திறமையையும் திரையுலகுக்கு இவரது அர்ப்பணிப்பையும் பாராட்டி தற்போது மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உட்பட மூன்று பேருக்கு கேரளாவில் இந்த விருது வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
