தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக திகழ்பவர் ஆர்.பி சவுத்ரி. இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் பிரபல நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி சவுத்ரி நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், நாட்டாமை, சூரியவம்சம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் ஆர்பி சவுத்ரி தன்னுடைய சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கினார். மேலும் இதில் அவருக்கு தற்போது பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மரணம் அடைந்தார். மேலும் அவருடைய உடல் 6-ம் தேதி சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. மேலும் இந்த செய்தி தற்போது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
