கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக இபிஎஸ்சை தொடர்ந்து ஓபிஎஸ்சும் களமிறங்கியுள்ளார். புலிகேசிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் முரளியை எதிர்த்து, அன்பரசனை அதிமுக வேட்பாளராக இபிஎஸ் நேற்று அறிவித்தார். இந்நிலையில், இதே தொகுதியில் பாஜக. இபிஎஸ் ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்து நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என்று ஓபிஎஸ் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.