கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பல்வேறு பலன்கள் எதுவும் கிடைப்பதில்லை எனவும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என திமுக கூறியிருந்தது.

இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கான ரூ. 61,251.16 கோடி தொகை LIC நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ‘தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 61.28 லட்சம் பேர் அரசுப் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறுகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.