சத்தீஸ்கரில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. 5 நிமிடத்திற்கு முன் வரை பாஜக 45, காங்., 44 இடங்களில் முன்னிலை வகித்தன. ஆனால், தற்போது காங்., 57 பாஜக 33 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பாஜகவை விட 20 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால், அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்