
தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பதவியேற்பு விழா நடந்தது. அதன்படி நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளர் கிஷன் ரெட்டி அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி பாஜக தேசிய பொது குழு உறுப்பினராக அவருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று எச். ராஜா, கரு நாகராஜன், சரத்குமார், வானதி சீனிவாசன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும் அமித்ஷா அண்ணாமலை இனி தேசிய அரசியலில் ஈடுபடுவார் என்று கூறிய நிலையில் மத்திய அமைச்சர் ஆவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கிஷன் ரெட்டி அறிவித்துள்ளார்.