
பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவைத் தாக்க முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானின் லாகூர் நகரத்தை தற்போது (வியாழக்கிழமை) வான்வழி தாக்குதல்களால் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, லாகூரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு முகாம்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பிறகு லாகூர் நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. பொதுமக்கள் இருட்டில் குழம்பும் நிலை ஏற்பட்டதாகவும், பாதுகாப்பு அமைப்புகள் அவசரமாக செயல்படத் தொடங்கியதாகவும் பாகிஸ்தானின் உள்ளூர் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. இந்தியாவின் தாக்குதலுக்கு முன்னதாகவே பாகிஸ்தான் விமானப்படை அச்சுறுத்தலுக்குள்ளான நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் இந்த பதிலடி, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தொடர்ச்சியாகும். பாகிஸ்தான் தொடர்ச்சியாக இந்திய ராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்க முயற்சித்ததற்கு இது ஒருவித எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தற்போதைய நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.